பாண்டா கரடி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பாண்டா கரடி. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 டிசம்பர், 2024

பாண்டா கரடி - பாண்டாவைப் பற்றிய சுவாரசியமான தகவல்கள்.Panda Bear Interesting facts about Panda.

           பாண்டா கரடி (PANDA BEAR).


         பொசு பொசு என்று இருக்கும் பாண்டா கரடியை பார்த்தவுடனேயே எல்லோருக்கும் பிடித்து விடும். பாண்டா பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை இங்குப் பார்க்கலாம்.

            



         பாண்டா கரடியை ஆங்கிலத்தில் ஜெயின் பாண்டா (Giant panda) , என்றும் பாண்டா பியர் (panda Bear) என்றும் அழைக்கிறார்கள்.


தோற்றம் :


    இது கரடியைப் போல் தோற்றம் தரும் சிறிய விலங்கு ஆகும்.
      வளர்ந்த பாண்டாக்கள் சராசரியாக 1.5 சுற்றளவு 75 செமீ நீளம் அளவுடையவை.
       ஆண் பாண்டாக்கள் 115 கிலோகிராம் வரை நிறை கொண்டவை. பெண் பாண்டாக்கள் பொதுவாக 10-20% ஆண் பாண்டாக்களை விட சிறியவை.
      பாண்டா கறுப்பு வெள்ளை கலந்த உரோமத் தோலை கொண்டவை. காதுகள், கண்களை சுற்றி, முகவாய், கால்கள், தோள்கள் ஆகியவை கறுப்பாகவும் மற்ற பகுதிகள் வெள்ளையாகவும்
காணப்படும்.


வளர்ச்சி :

           



      பிறந்த பாண்டா குட்டி இளஞ்சிவப்பு நிறத்தில் காணப்படும்.பிறந்ததும் கண் தெரியாது.
      பத்து நாட்களுக்கு பிறகு அதன் நிறம் மாறத் தொடங்கி, அதன் வழக்கமான நிறமான கருப்பு-வெள்ளையை
அடையத்தொடங்கும்.

தகவல் தொடர்பு:


      பாண்டாக்கள், குரல்ஒலி,மரத்தில் கீறி குறியிடுதல் மற்றும் சிறுநீரைத் தெளித்தல் மூலமாக தகவல்களைப் பரிமாறிக் கொள்கின்றன.
       இவை தம் தேவைக்கு ஏற்ப இடம் பெயர்வதால் நீண்ட காலத் துயிலில் ஈடுபடுவதில்லை.


உணவு :


      பாண்டா கரடிக்கு பிடித்த உணவு மூங்கில்.
        அதன் கடைவாய் பற்கள் தட்டையாக இருப்பதால் ஒன்றை அங்குள்ள நீளமுள்ள மூங்கிலைக் கூட கடித்துத் தின்றவிட முடியும்.

           


  
        பாண்டா கரடிகள் மூங்கில் தவிர சின்ன சின்ன பூச்சிகள், சின்ன பறவைகளை  இரையாகக் கொள்ளும்.   
       நன்கு வளர்ந்த பாண்டா கரடி ஒரு நாளைக்கு 12 முதல் 38 கிலோ கிராம் வரை சாப்பிடக்கூடியது.


வசிப்பிடம் :


       சீனாவில் மட்டும் காணப்படும் பாலூட்டி விலங்கு பாண்டா கரடி.
       சீனாவின் தேசிய விலங்குகளில் ஒன்று .
        அங்கு பாண்டா கரடிக்கு பல சிலைகள் உள்ளன அவற்றில் ஒன்று பாண்டா செல்ஃபி எடுப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது.
வாழ்நாள் :
      பாண்டா கரடிகள் 15 முதல் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழும். நல்ல பராமரிப்பில் இருந்தால் 30 ஆண்டுகள் வரை உயிரோடு இருக்கும் .
      ஜியா ஜியா என்ற பெண் பாண்டம் 30 ஆண்டு காலம் உயிர் வாழ்ந்தது.


எடை :


     ஒரு வருடத்தில் 45 கிலோகிராம் அளவு எடை கொண்டு இருக்கும் .ஐந்து வருடங்களுக்கு பிறகு அதன் எடை 100 கிலோவை அடைந்திருக்கும். ஆண் பண்டா கரடிகள் சுமார் 110 கிலோகிராம் வரையும், பெண் பாண்டா கரடிகள் 100 கிலோகிராம் வரையும் எடை கொண்டிருக்கும்.


சிறப்பு :


         பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மரம் ஏறத் தொடங்கும் .மரங்கள் ஏறுவதற்கு பாண்டா கரடிகள் மிகவும் விரும்பும் . அதற்கான பயிற்சி தாய் உடலின் மீது ஏறி ஏறியே பழகும் .         

         


                               
        பாண்டா கரடி பிறந்த ஐந்து மாதங்களில் இருந்து நீந்துவதற்கு பழகி விடுகின்றன அவற்றால் மிகவும் வேகமாக நீந்த முடியும்.
        கரடி மணிக்கு சுமார் 30 முதல் 32 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது.


SPONSORSHIP :


"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"






எழுவாய் செயப்படுபொருள் பயனிலை கொண்டு சொற்றொடர் அமைக்கும் முறை - Setting the phrase with the use of the material.

      @ சொற்றொடர் அமைப்பு முறை @         சொற்றொடர் அமைத்தலில் எழுவாய் , செயப்படுபொருள் , பயனிலை ஆகிய மூன்றும் முக்கிய பங்கினை வகிக்கிறது. எ...