# நண்டுகள் ( CRABS ) #
முட்டையிட்டு குஞ்சு பொறிக்கும் நண்டு பற்றிய சுவாரசியமான செய்திகளை இதில் காணலாம். ஜப்பானிய கடலில் மிகப்பெரிய நண்டுகள் வாழ்கின்றன.
நண்டுகள் பிரபலமான கடல் உணவு ஆகும்.நன்னீர், உவர்நீர் இரண்டிலும் வாழும் தன்மையுடையவை.
நண்டுகளின் வகைகள் :
1 . தேங்காய் நண்டு.
2 . குளுவான் நண்டு.
3 . நீலக்கால் நண்டு.
4 . குதிரைலாட நண்டு
உலகின் மிகப்பெரிய நண்டு :
ஜப்பானிய சிலந்தி நண்டு, 13 அடி (4 மீட்டர்) க்கும் அதிகமான கால் இடைவெளியை அடையும் திறன் கொண்டது.
இருப்பிடம் :
பொதுவாக நண்டுகள் ஆறு , குளம் , கடல் இவற்றின் தரைகளிலும் வயல் வரப்புகளிலும் காணக் கிடைக்கின்றன.
உடலமைப்பு :
நண்டுகளுக்கு கனமான மேல் ஓடு இருக்கும் . இது ஓட்டு மீன் இனத்தைச் சார்ந்தது.
நண்டின் தலையும் , மார்பும் ஒன்றாக இணைந்து மேல் ஓட்டினால் மூடப்பட்டிருக்கும்.
உடலின் பின் பகுதியாக இருப்பது வயிறு.
கண்கள் :
கூட்டுக் கண்கள் இரண்டினைக் கொண்டவை. நண்டின் கண்கள் , காம்பு போன்ற சிறு உறுப்புகளின் நுனியில் அமைந்துள்ளன . இந்த காம்புகள் உயர்த்தி மடக்கி வைத்துக் கொள்ளக் கூடியவை . மற்ற நேரங்களில் மேலோட்டின் விளிம்பில் உள்ள இரு பள்ளங்களில் காம்புகளை மடித்து வைத்துக் கொள்ளும்.
ஆண்டுக்கு ஒருமுறை மேலோடு கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன.
பெண் நண்டுகள் ஆண் நண்டுகளை விட பார்க்க அகலமான வயிற்றுப் பகுதியைக் கொண்டுள்ளன. வயிற்றின் கீழேயே அவை தம் முட்டைகளைக் கொண்டுள்ளன.
கால்கள் :
நண்டுக்கு 10 கால்கள் உள்ளன . இவற்றில் முன் பக்கத்தில் உள்ள இரு கால்கள் மிகப் பெரியதாகவும் நுனியில் வலுவான பெரிய இடுக்கி உடையதாகவும் இருக்கும். இவை இரையைப் பிடிக்கின்றன . மற்ற எட்டு கால்களும் நடக்க உதவுகின்றன.
கடலில் நீந்தி வாழும் நண்டுகளுக்கு பின்னங்கால்கள் தொகுப்பு போல தட்டையாக இருக்கும்.
நண்டுகள் எப்போதும் பக்கவாட்டிலேயே நடக்கக் கூடியவை.
சுவாசம் :
நண்டுகள் செவுள்களால் சுவாசிப்பவை . மேல் ஓட்டின் பக்கங்களில் இச்செவுள்கள் உள்ளன .
சிறு பூச்சி , புழு , பாசி ஆகியவை நண்டின் உணவாகும்.
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #application.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக