#நச்சு அம்புத் தவளைகள் (Poison Dart Frog)#
மத்திய தென் அமெரிக்காவின் வெப்ப மண்டல மழை காடுகளில் இந்த நச்ச அன்பு தவளைகள் காணப்படுகின்றன.
இதன் அறிவியல் பெயர் Bilateria என்பதாகும். கரையான்கள், எறும்பு, பூச்சிகளை உணவாகப் பெறும். இத்தவளைகள் நீர் நில வாழ்வன வகுப்பையும், முதுகுநாணி தொகுப்பு விலங்குகளின் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
மற்ற பல நீர் நில வாழ்வனப் போல் அல்லாமல் இவை பகல் நேர வாழ்க்கை வாழ்கின்றன . இவற்றில் பெரும்பாலான இனங்கள் நிலப்பரப்பில் தான் வாழ்கின்றன.
தவளை இனங்கள் :
170-க்கும் அதிகமான தவளை இனங்களில் 13 தவளை இனங்கள் விசத்தன்மையுடையதாக இருக்கின்றன. அவற்றுள் 4 தவளை இனங்கள் மிகுந்த விசத்தன்மை கொண்டவை. அவற்றில் ஒன்றாக, இந்த நச்சு அம்புத் தவளைகள் இருக்கின்றன.
விஷத்தன்மை :
கண்கவரும் ஒளிமயமான நிறங்களில் காணப்படும் இத்தவளைகளின் முதுகுப் பகுதியில் ஒரு வகையான கொழகொழப்பான, கொடிய விஷம் சுரக்கின்றது. இந்த விசத்தை எதிரிகளைத் தாக்கப் பயன்படுத்துகிறது. இத்தவளை சுரக்கின்ற விஷம் கிட்டத்தட்ட 10 மனிதர்களையோ அல்லது 20 ஆயிரத்துக்கும் அதிகமான எலிகளையோக் கொல்லக்கூடியதாக இருக்கின்றன.
வண்ணமயமான ஆபத்து :
உலகிலேயே மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த உயிரினங்களில் ஒன்றாகும். இவை பொதுவாக ஒரு அங்குலம் முதல் அதிகபட்சம் இரண்டரை அங்குலம் வரை மட்டுமே வளரக்கூடியவை.
பார்ப்பதற்குக் கண்கவர் பிரகாசமான வண்ணங்களில் (பொன், ஆரஞ்சு, நீலம், பச்சை மற்றும் கருப்பு போன்ற கலவைகளில்) இவை காட்சியளிக்கின்றன. இதன் அழகான நிறம், மற்ற விலங்குகளுக்கு, "என்னைத் தொடாதே, நான் ஆபத்தானவன்" என்று எச்சரிக்கை விடுக்கும் ஒரு அடையாளமாகப் (Aposematism) பயன்படுகிறது.
இந்தத் தவளைகள் டெண்ட்ரோபாட்டிடே (Dendrobatidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்தவை.
நச்சுத்தன்மை மற்றும் பெயர் காரணம் :
இந்தத் தவளைகளின் தோலில், ‘அல்கலாய்ட்’ (Alkaloid) எனப்படும் கொடிய விஷம் சுரக்கிறது. இந்த நஞ்சு, நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை முழுமையாகச் செயலிழக்கச் செய்து, தசைகளைச் சுருக்கி, சில நிமிடங்களிலேயே மனிதர்களையோ அல்லது விலங்குகளையோ கொல்லும் திறன் கொண்டது.
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த பொன் நிற நச்சுத் தவளையின் (Golden Poison Frog) விஷம், 10 மனிதர்களைக் கொல்லும் அளவுக்கு வீரியம் கொண்டது.
பழங்காலத்தில், உள்ளூர் பழங்குடி மக்கள், வேட்டையாடுவதற்காகத் தங்கள் அம்புகளின் முனையை இந்தத் தவளையின் தோலில் தடவி நஞ்சேற்றினர். இதனால்தான் இவை 'நச்சு அம்புத் தவளைகள்' (Poison Dart Frogs) என்று பெயர் பெற்றன.என்பது குறிப்பிடத்தக்கது.
இயற்கைச் சூழலும் பாதுகாப்புத் தேவையும் :
நச்சு அம்புத் தவளைகள் ஈரப்பதமான மழைக்காடுகளிலேயே வாழ்கின்றன. இவற்றின் பிரகாசமான நிறம் காரணமாக, அவை காடுகளின் 'ஆபரணம்' என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தத் தவளைகள் தமது உணவுச் சங்கிலிக்கு முக்கியமானவை.
ஆனால், காடுகள் அழிக்கப்படுவதாலும், செல்லப் பிராணிகளுக்காக சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாலும் இவற்றின் சில இனங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த வனத்துறைக் காக்கும் உயிரினங்களைப் பாதுகாப்பது, மழைக்காடுகளின் சமநிலையைப் பேணுவதற்கு மிக அவசியம்.
Sponsorship :
"This Content Sponsored by SBO Digital Marketing.
Mobile-Based Part-Time Job Opportunity by SBO!
Earn money online by doing simple content publishing and sharing tasks. Here's how:
- Job Type: Mobile-based part-time work
- Work Involves:
- Content publishing
- Content sharing on social media
- Time Required: As little as 1 hour a day
- Earnings: ₹300 or more daily
- Requirements:
- Active Facebook and Instagram account
- Basic knowledge of using mobile and social media
For more details:
WhatsApp your Name and Qualification to 9994077196.
a.Online Part Time Jobs from Home
b.Work from Home Jobs Without Investment
c.Freelance Jobs Online for Students
d.Mobile Based Online Jobs
e.Daily Payment Online Jobs
Keyword & Tag: #OnlinePartTimeJob #WorkFromHome #EarnMoneyOnline #PartTimeJob #jobs #jobalerts #withoutinvestmentjob"





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக