வெள்ளி, 30 ஆகஸ்ட், 2024

விடுகதை !!! (கண்டுபிடி)

                                                     விடுகதை  !!!  


1.ஆழங்குழித் தோண்டி அதிலே ஒரு முட்டையிட்டு அன்னார்ந்துப் பார்த்தால் தொண்ணூறு முட்டை.அது என்ன?

             


2.பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள்.அது என்ன?

              


3.ஒரு குப்பிக்குள் இரண்டு தைலம்.அது என்ன?

             


4.காலாலே நீர் குடித்து தலையாலே நீர் தரும்.அது என்ன?

           


5.கொக்கு கருகுவதற்கு குளம் வற்றுகிறது.அது என்ன?

              


6.கோண கோண புளியங்காய் உங்க நாட்டிலிருந்து எங்க நாட்டுக்கு வருது.அது என்ன?

          




7.உறிச்ச கோழி ஊருக்கு போகுது.அது என்ன?

           


8.எலும்பு இல்லாத மனிதன் கிளையிலே ஏறுகிறான்.அது என்ன?

           


9.அம்மா புடவையை மடிக்க முடியாது.அப்பா காசை எண்ண முடியாது.அது என்ன?

           


10.பறவையின் காது நீண்டு கால் போகும்.கிடைப்பது கேக்கு. 3 எழுத்து சொல்.அது என்ன?

         





விடைகள் :


 1. தென்னைமரம்.

2 .வெண்டைக்காய் .

3 .முட்டை .

4. இளநீர் .

5. விளக்குத்திரி .

6. சாலை .

7. தேங்காய் .

8. பேன் .

9 .வானம்,நட்சத்திரம்.

10. கொக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...