@ கழிவுப் பொருள்களை அகற்றுதல் @
இன்றைய நவீன காலகட்டத்தில் தூக்கி எறியப்படும் கழிவு பொருட்கள் அதிகமாக உள்ளது . " எங்கும் குப்பை எதிலும் குப்பை" என்ற நிலை வந்து விட்டது. இவற்றை உரிய முறையில் அகற்றப்படாவிட்டால் அதனால் ஏற்படும் பலவித துன்பங்களுக்கு நாம் தான் ஆளாக நேரிடும்.
நகரங்களில் கழிக்கப்படும் சிறுநீர் பரவலாக நோய்களுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
பேருந்து நிலையம் மற்றும் பொது இடங்களில் உள்ளே நுழையும் பொழுதே அங்கு சிறுநீர் கட்டிட அருகில் அல்லது சாலை ஓரங்களிலிருந்து துர்நாற்றம் தாங்க முடியவில்லை. இந்நிலை மாறப்பட வேண்டும்.அவ்விடங்களில் அடிக்கடி கிருமி நாசினி பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.
கிராமங்களில் பெரும்பாலும் நகரங்களைப் போல பொருட்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை . அவை எளிதில் மக்கக் கூடியதாக அமைந்து எருவாக மாற்றப்பட்டு பயன்டுத்தப்படுகிறது.
நகரங்களில் பிளாஸ்டிக்கின் பயன்பாடு அதிகமாக இருப்பதால் மற்றும் இடப் பற்றாக்குறையும் இருப்பதால் எளிதில் கழிவுகளை பொட்டலமாகக் கட்டி வெளியில் தூக்கி எறிந்து விடுகின்றன. அரசாங்க முன்னெடுத்துள்ள சுகாதாரப் பணியாளர்கள் வீட்டு வாசலுக்கே வருகின்றனர். இவர்களிடம் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து அனுப்புவதிலும் குறை ஏற்படுகிறது. இதனாலேயே கழிவுகள் சேர்ந்து நம் சுகாதாரம் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்படுகிறது.
அரசாங்கம் கழிவுகளை வெளியில் தூக்கிப் போடும் மக்களுக்கு கடுமையாக வரி விதிப்புச் சட்டங்களை ஏற்படுத்தி கண்காணிக்க வேண்டும்.
மாடித்தோட்டம் :
மட்கும் காய்கறி மற்றும் இதர கழிவுகளை வீட்டிற்குள்ளேயே துற்நாற்றமின்றி எளிய முறையில் உரமாகத் தயாரித்து , மாடி தோட்டங்கள் அமைத்து அதன் மூலம் பலன்களைப் பெறலாம்.
மாடிக்கூரை :
மாடிக்கு பந்தல் அமைத்து கொடி வகைகளை போடுவதன் மூலம் வெயிலை கக்கும் சீட் வகைகளுக்கு பதிலாக இயற்கையான முறையில் கூரை அமைத்துக் கொள்ளலாம்.செலவும் குறைவு.நல்ல காற்றோட்டம் கிடைக்கும்.
பெரும்பாலும் நகரங்களில் சாக்கடை கழிவுநீர் ஆறாக ஊற்றெடுக்கும் நிலை ஏற்படுகிறது . இதிலிருந்து பலவித தீமை செய்யும் உயிரினங்கள் ஏற்பட்டு நோய்களை உண்டு பண்ணுகிறது . கழிவு நீரை குழாய்கள் மூலமாக நகரத்திற்கு அப்பால் சுத்திகரித்து வெளியேற்றப்பட வேண்டும்.
வீடுகளில் பயன்படுத்தப்படும் கழிவு நீரை தோட்டத்திற்கு பாய்ச்சி அதன் மூலம் இயற்கை முறை காய்கறிகளைப் பெற்று பயனடையலாம்.தோட்டத்தில் நமது கவனம் செல்லும் போது மன அழுத்தம் குறையும்.
அல்லது முறைப்படி குழிகள் அமைத்து நிலத்திற்குள் கழிவுநீரை அனுப்பலாம்.
பயோ செப்டிக் டேங்க் :
தற்போது மனித கழிவுகளை கூட உரமாக மாற்றும் முறை வந்துவிட்டது.கழிவுகளை திட உரமாக மாற்றி வேளாண்மைக்கு பயன்படுத்தலாம்.ஆனால் இம்முறையைப் பயன்படுத்த யாரும் முற்படுவதில்லை.
அதற்கு மாற்றாக
பயோடெக்செட் வந்துள்ளது. இயற்கைக்கு ஊறு விளைவிக்காத வகையில் கழிவுகள் முற்றிலுமாக உள்ளேயே நன்மை செய்யும் பாக்டீரியாக்களால் செரிக்கப்பட்டு நல்ல நீராக வெளியேற்றப்படுகிறது. ஒரே ஒரு முறை மட்டும் செலவு.இதன் பயன்பாடுகளை உணர்ந்து நாம் அதனை பயன்படுத்த முற்பட வேண்டும்.தற்போது பிரபலமாகி வருகிறது.
எரிபொருளாக மாற்றம் :
( இம்முறை நம் தமிழகத்திற்கும் வந்துவிட்டது.)
வீட்டுக் காய்கறிக் கழிவுகள், இறைச்சிக் கழிவுகள், உணவு கழிவுகள் என எந்த கழிவானாலும் (பிளாஸ்டிக் அல்ல) அதனை பயன்படுத்தி நாம் எரிபொருளாக பயன்படுத்தும் முறையும் வந்துவிட்டது. கழிவுகளை பெரிய பீப்பாயில் நாம் கொட்டினால் அதிலிருந்து வெளியேறும் வாயுக்களை எரிபொருளாகப் பயன்படுத்தலாம்.இதனையும் உணர்ந்து நாம் எல்லாவற்றையும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தோமேயானால் கழிவுகளால் நமக்கு எந்த நோய்களும் அண்டாது.
இது போன்று இயற்கையோடு இயைந்து கழிவுகளை அன்றாடம் பயனுள்ளதாக மாற்றிக் கொண்டால் நம் வாழ்க்கை மிக மகிழ்ச்சியானதாக மாற்றப்படும்.நாமும் ,நம் சுற்றத்தாரும் சுகாதாரமான,மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ முடியும்.
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக