அன்றாட வாழ்வில் சுகாதாரம் !
1 . நிலம் :
காய்ந்த தரையில் வசிப்பது எப்பொழுதும் நமது உடலுக்கு நன்மையை விளைவிக்கும் . ஈரத் தரையில் வசித்தால் நமது சுவாசப்பையை கெடுத்து காசநோய் , விஷ ஜுரம், வயிற்றில் கட்டி, விஷ பேதி, சீத பேதி முதலிய நோய்களை உண்டாக்கும். மேட்டுப்பங்கான நிலப்பகுதி சாதாரண உடல்நலத்தை அளிக்கக்கூடியது. ஈரநிலைகளில் வாழ்வது நமக்கு ஏற்றதல்ல. ஈரம் இல்லாத இடங்களில் மரங்கள் அதிகமாக அடர்ந்திருந்து காற்றோட்டத்தை தடுத்தால் அது நமக்கு கெடுதலை உண்டாக்கும்.
தற்போது நாம் இருக்கும் நகர வாழ்க்கையில் கட்டிடங்கள் உயர்ந்து இப்படித்தான் உள்ளது.
2. நீர் :
நமக்குப் போதிய நீர் கிடைக்காததாலும், கிடைக்கும் நீர் அசுத்தமாக இருப்பதாலும் நமக்கு உண்டாகும் வியாதிக்கு அளவே இல்லை. நீரின் குணம் அதை தேக்கி வைக்கும் வகைகளையும் நாம் பரிசோதிக்க வேண்டும் .நீர் அருந்த, உணவு சமைக்க,துணிகளை துவைக்க, பாத்திரங்களை கழுவ, விலங்குகளை குளிப்பாட்ட, வாகனங்களின் வெப்பத்தை குறைக்க என பலவகைகளில் பயன்படுத்தி கழிவு நீராக ஓரிடத்தில் தேங்கிறது.
இவை துற்நாற்றத்தை ஏற்படுத்துவதோடு நில மாசுபாடு,நீர் மாசுபாடு,காற்று மாசுபாட்டினை ஏற்படுத்துகிறது.
மாசுபட்ட நீரைக் குடிப்பதால் வயிற்றுப்போக்கு, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகின்றன. மற்றும் மாசடைந்த நீரில் குளிப்பதால் தோல் நோய்கள் ஏற்படுகிறது.
நாம் குடிக்கும் குடிநீரானது,
1. யாதொரு கசடும் இல்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
2. நீரில் மணமும், ருசியும் இல்லாமல் இருக்க வேண்டும்.
3. பருப்பு எளிதில் வேகக் கூடியதாக இருக்க வேண்டும் .
4. பிராணவாயு அதில் கலந்து இருக்க வேண்டும்.
குடிநீரை கொதிக்க வைத்து உபயோகப்படுத்துவதால் அதில் உள்ள கெடுதல் விளைவிக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. எனவே காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
3. காற்று :
சாக்கடையில் இருந்து விஷ காற்று உண்டாகாத வண்ணம் சுத்திகரிக்கப்பட வேண்டும் .வாழை மட்டைகள், எச்சிலைகள் மற்றும் வீட்டு கழிவுகளை. ஓரிடத்தில் குவிக்காமல் அவை உடனடியாக உரிய முறையில் அகற்றப்பட வேண்டும். மாட்டு கொட்டகை, குதிரை இலாயங்கள் போன்றவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சுவாசத்திற்கு போதுமான நற்காற்று இல்லாவிடில் ஜீரண சக்தி சிறிது சிறிதாக குறையும். சுவாசம் பாதிக்கப்பட்டால் சுவாசக் குழலில் பிரச்சனை, காசநோய் உண்டாகலாம். கெட்ட காற்றை சுவாசிப்பதால் முதலில் தேகம் வெளுக்கும். பசி எடுக்காது. தேகம் பலம் குன்றும். மனதில் உற்சாகம் குறையும்.
இயற்கையான மரங்களை நம்மைச் சுற்றிலும் வளர்ப்பதன் மூலம் சுத்த காற்றினை சுவாசிக்கலாம் . வீடு நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருக்கும். இயற்கையான காற்று உள்ளே வருவதும் செல்வதுமாக இருந்தால் நோய்களை தவிர்க்கலாம். அதனால் இயற்கை வளம் காக்க வேண்டும்.
4. உணவு :
உணவு சுகாதாரம், தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாதது. சரியான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், உணவு மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம்.
@ சமைக்கும் பாத்திரங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
@ சமையல் அறையை நல்ல வெளிச்சம் உள்ளதாக மற்றும் காற்றோட்டம் உள்ளதாக வைத்துக் கொள்ள வேண்டும்.
@ சாப்பிடும் முன்னரும் பின்னரும் கைகளை கழுவ வேண்டும்.
@ உணவை மென்று உண்ண வேண்டும். பேசிக் கொண்டே உண்ணக்கூடாது .
@ சாப்பிடும் போது அளவுக்கு அதிகமான நீரை குடிக்கக்கூடாது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
@ உணவு சுவையாக இருக்கிறது என்பதால் அதிகமான உணவை உண்டு அவஸ்தை கொல்லக்கூடாது.
5. குளித்தல் :
ஒவ்வொருவரும் சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து பல் துலக்கி விட்டு குளித்து விட வேண்டும். குளிர்ந்த நீரில் குளிப்பதால் சருமத்தில் இருக்கும் ரத்தம் உள்நோக்கி வேகமாக ஓடி ஒருவித சுத்தத்தை உண்டு செய்கிறது. நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் வெந்நீரில் குளிக்கலாம். அவர்கள் குளிர்ந்த நீரில் குளிக்க கூடாது.
வெந்நீரில் குளிப்பதால் மேல் உள்ள அசுத்தம் வெளியேறினாலும் குளிர்ந்த நீரில் குளிப்பதை போல் அவ்வளவு ஆரோக்கியம் இருக்காது. இதில் அதிக உஷ்ணத்தால் ரத்தம் நமது சருமத்திடம் வந்து சேர்ந்து வியர்வை குழாயில் உள்ள அதிக அசுத்தத்தை வெளியேற்றுகிறது. வெந்நீரில் குளித்தவுடன் அதிக வியர்வை உண்டாகிறது அல்லவா? அந்த சந்தர்ப்பங்களில் குளிர் காற்று நம் உடலில் பட்டால் பலவிதமான நோய்களை உண்டாக்குகிறது. இவ்வாறு வெந்நீரில் குளித்தால் குளிர்காற்றுப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கும் வயதானவர்களுக்கும் வெதுவெதுப்பான நீர் நல்ல ஆரோக்கியத்தை தரும்.
@ சாப்பிட்ட உடன் குளிக்கக் கூடாது.
@ அதிகம் களைப்படைந்து இருந்தாலும் , நோய் வாய்ப்பட்டு இருந்தாலும் குளிக்க கூடாது.
@ கடல் குளியல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
6. மோருக்கு மிகுந்த நற்குணங்கள் உண்டு.
இரத்தக்குழாய்களில் மண் சம்பந்தப்பட்ட அசுத்த பண்டங்களையும் மோரிலுள்ள புளிப்பானது எளிதில் கரைத்து விடுகிறது எனவே மோர் அருந்துவது உடலுக்கு நல்லது.
7. சூரிய ஒளியும் மனிதனது தேக நிலையும் :
சூரிய உதயத்திற்கு முன்பு எழுந்து சூரிய உதயம் நம் உடலில் படும்படி நாம் அதிக நேரம் வெயிலில் நமது பணிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் சூரிய சக்தி நமது உடலுக்குள் கிடைத்து எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
8. ஆடைகள் தூய்மையானதாக இருக்க வேண்டும். " கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். உடுத்திய ஆடைகளையே மீண்டும் மீண்டும் உடுத்தாமல் நல்ல தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும் . குளிர்கால, கோடை காலத்திற்கு என காலத்திற்கு ஏற்ற ஆடைகளை அணிய வேண்டும்.
9. தூக்கம் என்பது நம் உடலுக்கு மிகப்பெரிய ஓய்வு . ஓய்வினை கெடுக்கும் பொழுது நமது உடலுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது. சராசரியாக ஒரு நாளைக்கு 8 மணி நேரம் நன்றாக தூங்கினால் நம் உடலுக்கு நல்லது. நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் தூங்க வேண்டும்.
10. அன்றாடம் எளிய உடற்பயிற்சிகளை செய்வதும் நமது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது .
இவற்றை கடைபிடித்தால் நம் சுகாதார வாழ்வினை வாழலாம்.
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"

























