‏إظهار الرسائل ذات التسميات சிறுகதை-சேமிப்பின் அவசியம்.. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சிறுகதை-சேமிப்பின் அவசியம்.. إظهار كافة الرسائل

السبت، 14 سبتمبر 2024

படித்தல் திறன் (சிறுகதை)

            

                                                   சிறுகதை.

                    சேமிப்பின் அவசியம்.

            


         உயிரினங்களில் எறும்புகள் சிறியவை.அவை எப்போதும் சோம்பிக் கிடப்பதில்லை.எப்போதும் சுறுசுறுப்புடன் தமக்கு வேண்டிய உணவை சேமிக்கும் பழக்கம் உள்ளவை.

      கோடைக்காலத்தில் எறும்புகள் சென்று கொண்டிருப்பதைக் கண்ட வெட்டுக்கிளி,  "வெயிலில் அலைவது கஷ்டமாக இல்லையா?" என்றது.

       அதற்கு எறும்புகள், "கஷ்டத்தைப் பார்க்க முடியுமா? மழைக்காலம் வந்துவிட்டால் வெளியில் வர முடியாது.அதனால் இப்போதே உணவைச் சேகரிக்கிறோம்" என்றன.

       வெட்டுக்கிளி வரப்போகும் மழைக்காலத்துக்காக இப்போதே ஆர்ப்பாட்டம் செய்கின்றன என்று தனக்குள் எண்ணியது.மழைக்காலம் வந்துவிட்டது.தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.

      அதனால் நடுங்கும் குளிர் ஏற்பட்டது.எந்த உயிரினமும் வெளியில் தலை காட்ட முடியவில்லை.எறும்புகள் தம் புற்றுக்குள்ளேயே சேமித்து வைத்த உணவைக் கொண்டு காலங் கழித்து வந்தன.

     வெட்டுக்கிளியின் நிலை தர்ம சங்கடமாகியது.அதனால் வெளியில் பறக்க முடியவில்லை.உணவும் கிடைக்கவில்லை.நீண்ட நாள் பட்டினி கிடந்தது.

       அப்போதுதான் அதற்கு எறும்புகளின் நினைவு வந்தது.அந்த புற்றுக்கு அருகில் சென்று "அன்று ஏளனம் செய்தேன்! அதன் பலனை இப்போது அனுபவிக்கிறேன்.பசியால் துடிக்கிறேன்" என்றது.

      எறும்புகள் பரிதாபப்பட்டு தங்கள் சேமிப்பிலிருந்து சிறிதளவு உணவைக் கொடுத்தன.வெட்டுக்கிளி மகிழ்ச்சியுடன் உண்டது.சேமிப்பின் அவசியத்தை உணர்ந்தது.

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...