‏إظهار الرسائل ذات التسميات சிறுகதை-மரியாதை ராமனின் தீர்ப்பு.. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சிறுகதை-மரியாதை ராமனின் தீர்ப்பு.. إظهار كافة الرسائل

السبت، 28 سبتمبر 2024

சிறுகதை-மரியாதை ராமனின் தீர்ப்பு.

     

                படித்தல் திறன்-சிறுகதை.

               மரியாதை ராமனின் தீர்ப்பு.

      


          நான்கு  திருடர்கள் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு ஏராளமானப் பொருட்களைச் சேர்த்தனர்.பின்னர் திருந்தி வாழ எண்ணினர்.

           


          தங்களிடமிருந்த பொருட்களை எல்லாம் ஒரு தவலையில் போட்டு மூடி தாங்கள் தங்கியிருந்த கிழவியிடம் பாதுகாக்கக் கூறி ஒப்படைத்து, "பாட்டி நாங்கள் நால்வரும் சேர்ந்து வந்து கேட்டால் மட்டுமே இதைக் கொடுக்க வேண்டும் " என்று கூறினர்.

              ஒரு நாள் நால்வரும் வெளியில் திண்ணையில் சூதாடிக் கொண்டிருக்கையில் ஒருவர் மோர் விற்றுக் கொண்டு வந்தார்.மோர் வாங்க தவலை வேண்டும் என்பதால் தங்களுள் ஒருவனை தவலையை வாங்கி வர உள்ளே அனுப்பினர்.

           


    உள்ளே சென்றவனுக்கு திருட்டு எண்ணம் குடிகொண்டது.அவன் பாட்டியிடம்,"நாங்கள் கொடுத்து வைத்திருக்கும் தவலையை நண்பர்கள் கேட்கிறார்கள்" என்றான்.பாட்டியும் உள்ளிருந்தபடியே,உங்களில் ஒருவன் தவலையைக் கேட்கிறான், கொடுக்கட்டுமா? என்றுக் கேட்க, கொடுத்து அனுப்புங்கள்" என்று கத்தினார்கள்.

    பாட்டியும் தவலையைக் கொடுத்து விட்டார்.அதை எடுத்துக்கொண்டு அவன் ஓடிவிட்டான்.சிறிது நேரத்திற்குப் பிறகுதான் நண்பனின் செய்கை தெரிந்தது.

       பாட்டியிடம் நஷ்டம் கேட்டனர்.பாட்டியின் மீது வழக்கினையும் பதிவு செய்தனர்.நீதிபதியிடம் பாட்டி அழுதாள். "நான் ஏழை.அவ்வளவு பொருளிற்கு எங்கே போவேன்?" என்றாள்.

         நீதிபதி மரியாதை ராமன் வழக்கின் தன்மையை ஆராய்ந்தார்.பாட்டியின் மீது எவ்வித் தவறும் இல்லை என்பதை உணர்ந்தார்.

      அவர்கள் மூவரையும் அழைத்து, "நீங்கள் என்ன சொல்லிப் பொருளை ஒப்படைத்தீர்கள்?" என்றுக் கேட்க "நாங்கள் நால்வரும் வந்துக் கேட்டால் தான் தவலையைக் கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்" என்றனர்.

         நீதிபதி மரியாதை ராமன்,  "இப்போது நீங்கள் மூன்று பேர் தானே இருக்கிறீர்கள்? நான்கு பேருமாக சேர்ந்து வந்து கேளுங்கள்.அப்போது பாட்டி தவலையைக் கொடுப்பார் என்று தீர்ப்பு கூறினார்.

        பதில் ஒன்றும் கூற முடியாமல் மூன்று பேரும் விழித்தனர்.



😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...