தமிழ் இலக்கணம்.
பால்.
* பால் என்பதற்கு பகுப்பு /பிரிவு என்று பொருள்.
* திணையின் உட்பிரிவே பால் ஆகும்.திணை என்பதற்கு ஒழுக்கம் என்பது பொருள்.திணை உயர்திணை, அஃறிணை என இரண்டு வகையாக பிரித்து அறியப்படும்.
உயர்திணை:
@ உயர்ந்த ஒழுக்கம் உடையவர்கள்.அதாவது நன்மை,தீமை என பகுத்தறியும் திறன் உடையவர்கள்.
@உயர்திணைக்குரிய பால்கள் மூன்று வகைப்படும்.அவை,
1.ஆண்பால்
2. பெண்பால்
3. பலர்பால் ஆகும்.
அஃறிணை:
@ அல்+திணை.அதாவது மனிதர்கள் அல்லாத பிற உயிருள்ள,உயிரற்ற அனைத்தும் சார்ந்தது..பகுத்தறியும் திறன் இல்லாதவை.
அஃறிணைக்குரிய பால்கள் :
இரண்டு வகைப்படும்.அவை,
1. ஒன்றன் பால்
2. பலவின்பால் ஆகும்.
திணையை உள்ளடக்கியே பால் ஐந்து வகைப்படும்.
பாலின் வகைகள் :
* பால் ஐந்து வகைப்படும்.
1. ஆண்பால் :
* பொதுவாக 'அவன்' என்றப் பெயரில் சுட்டப்படும்.
*னகர ஈறுகள் ஆண்பாலை உணர்த்தும்.எ.கா:அவன், இவன், வந்தான்.
பாட்டி
பூக்காரி.
நளினி.
*ஓர் பெண்ணைக் குறிப்பது பெண்பால்.(ராகவி,குறத்தி, பைரவி, இளவரசி, சன்விகா)
* பொதுவாக 'அவள்' என்றப் பெயரில் சுட்டப்படும்.
* ளகர ஈறுகள் பெண்பாலை உணர்த்தும்.
எ.கா:அவள், இவள், வந்தாள்.
மக்கள்.
மாணவர்கள்.
* உயர்திணையில் பலரைக் குறிப்பது பலர்பால்.
* அவர்கள் என்றப் பெயரில் சுட்டப்படும்.
* அர், ஆர் என்பன பலர்பாலை உணர்த்தும்.எ.கா:அவர், இவர், உண்டார்.
4.ஒன்றன் பால் :
பொம்மை.
*அஃறிணையில் ஒன்றைக் குறிப்பது ஒன்றன்பால்.
* அது என்ற பெயரில் சுட்டப்படும்.
பறவைகள்.
பூக்கள்.
வளையல்கள்.
* அஃறிணையில் பலவற்றைக் குறிப்பது பலவின்பால்.
* அவை என்றப் பெயரில் சுட்டப்படும்.
Vedio link : : https://drive.google.com/file/d/12FODW60eRrIgMABOiik5h0Wwjtsa02ez/view?usp=drivesdk
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"