‏إظهار الرسائل ذات التسميات கலங்கரை விளக்கம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات கலங்கரை விளக்கம். إظهار كافة الرسائل

الخميس، 12 سبتمبر 2024

கலங்கரை விளக்கம்.

                                    @  கலங்கரை விளக்கம்  @

                                               (Light house - வெளிச்ச வீடு)

     


    

          கடலில் செல்லும் கப்பல்களுக்கு வழி காட்டுவதற்காக ஒளி உமிழும் விளக்குகள்  அமைக்கப்பட்ட உயர்ந்த கோபுரமே கலங்கரை விளக்கம். இதை வெளிச்சவீடு எனவும் அழைப்பார்கள்.

          முற்காலத்தில் இக்கலங்கரை விளக்கங்களில் தீச்சுவாலை விளக்குகள் ஒளி மூலங்களாகப் பயன்பட்டன.பின்னர் மெழுகு வர்த்திகளும் பயன்படுத்தப்பட்டது.பிற்காலங்களிலேயே கலங்கரை விளக்கங்களில்,  மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.

       கலங்கரை விளக்குகள், ஆபத்தான கரைப் பகுதிகளையும், பவளப் பாறைகள் நிறைந்த இடங்களைக் குறித்துக் காட்டுவதற்காகவும், துறைமுகங்களுக்கான பாதுகாப்பான நுழை வழிகளைக் குறிப்பதற்காகவும் பயன்பட்டன. 


கோடியக்கரை கலங்கரை விளக்கம் :

           


          பண்டைய காலத்தில் தமிழர் கப்பல் போக்குவரத்திற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் கலங்கரை விளக்கங்களைக் கட்டியுள்ளார்கள். சோழர் காலத்து கலங்கரை விளக்கத்தை நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரையில் உள்ளது.

       "இலங்குநீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்" (சிலப்பதிகாரம் 6: 141) எனும் அடிகளால் பழந்தமிழ் நாட்டிலும் கலங்கரை விளக்கங்கள் இருந்ததென்பதை அறியலாம்.

           தற்போது பல கருவிகள் பெருகி வந்துள்ள நிலையில், செயற்படும் கலங்கரை விளக்கங்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்டது.

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...