الأحد، 25 أغسطس 2024

படித்தல் திறன் (சிறுகதை)

          தமிழ் சிறுகதை (படித்தல் திறன்)

                                                        ஒற்றுமையே பலம்.


         



               ஒரு கிராமத்தில் அண்ணன்,தம்பிகள் நான்கு பேர் இருந்தனர்.அந்த நால்வரும் எப்போதும் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டே இருந்தனர்.அவர்களுக்குள் ஒற்றுமையை ஏற்படுத்த அவர்களின் தாத்தா ஒரு வழியை யோசித்தார். 

         இந்த வழி சிறிய வயதில் கேட்ட ஒரு கதையில்  இருந்து அவர் கற்றுக்கொண்டது.ஒரு நாள் தன் பேரப் பிள்ளைகளிடம் அடுப்பு எரிக்கப் பயன்படுத்தும் ஒரு கட்டு சுள்ளிக் கட்டைகளை வாங்கி வரக்கூறினார்.

       அந்த சுள்ளிக்கட்டை ஒவ்வொரு பேரனிடமும் கொடுத்து,அதை இரண்டு துண்டுகளாக உடைக்கும்படிக் கூறினார்.பேரன்கள் நால்வரும் தனித்தனியாக முயன்றும் சுள்ளிக்கட்டை உடைக்க முடியவில்லை.

    பின் அந்தச் சுள்ளிக்கட்டை அவிழ்த்து,ஆளுக்கு ஒரு சுள்ளிக் குச்சிகளைக் கொடுத்து ஒடிக்கக் கூறினார்.அவர்கள் சுலபமாக ஒடித்துவிட்டனர்.

      "நீங்கள் நால்வரும் ஒற்றுமையாக இருந்தால் உங்களை யாரும் ஒன்றும் செய்யமுடியாது.  தனித்தனியே பிரிந்து இருந்தால் பாதிப்படைவீர்கள்" என்றார்.

     கடைசிப் பேரன் குமார் கேட்டான்,"தாத்தா,என்னோடு படிக்கின்ற சரவணன்,எனது நண்பன்.ஆனால் அவனோடு உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லையே .....அப்போ என்ன செய்யுறது?"

     உடன் பிறந்தவர் இல்லை என்றால் என்ன?"நீ தான் நட்பாக இருக்கிறாயே! உன் போன்ற  நண்பர்களைப் பிரியாமல் இருந்தாலே பலம்தான்" என்றார் தாத்தா.



ليست هناك تعليقات:

إرسال تعليق

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...