الاثنين، 23 سبتمبر 2024

படித்தல் திறன்-சிறுகதை.

                                          

முல்லாவின் பயணம் .


          


        ஓர் ஊரில் முல்லா என்ற சோம்பேறி இருந்தான். எந்த வேலையும் செய்ய மாட்டான். அவனைத் திருத்துவதற்காக அவனின் தந்தை ஒரு தந்திரம் செய்தார்.

      " மகனே, அந்தக் காட்டில் என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஒரு வேலையும் செய்யாமல்பணக்காரராகும் வழித் தெரியும்" என்றார் தந்தை. உடனே அவரைச் சந்திக்க முல்லா புறப்பட்டான்.
  
          காட்டுக்குச் செல்லும் போது பலா மரம் ஒன்றைப் பார்க்கிறான். அம்மரம்,  " நீ எங்கே செல்கிறாய்?" என்று கேட்டது. முல்லா தான் செல்லும் நோக்கத்தைக் கூறினான்.
            "என் மரத்தில் பூக்கள் பூத்ததுமே, கருகிக் கீழே விழுந்து விடுகின்றன. இதற்கு என்ன தீர்வு எனக் கேட்டு வருவாயா?" என்றது பலாமரம். முல்லாவும் சரி என்றுக் கூறித் தொடர்ந்து நடந்தான்.

               

             பின்னர் தொடர்ந்து செல்லும் வழியில் எதிரில் வந்த ஓநாய் முல்லாவின் நோக்கத்தை அறிந்து கொண்டு " எனக்கு அடிக்கடி வயிறு வலிக்கிறது. அதற்கு என்ன தீர்வு என்று அவரிடம் கேட்டு வருவாயா?" என்றது ஓநாய். முல்லாவும் சரி என்று கூறி தொடர்ந்து நடந்தான்.

       கடைசியில், தந்தையின் நண்பரைச் சந்தித்தான். பணக்காரர் ஆவதற்குச் சில வழிகளை அவர் கூறினார். முல்லா பலாமரம்,ஓநாய் ஆகியவற்றின் பிரச்சினைகளையும் எடுத்துக் கூறினான்.

        "பலா மரத்தின் கீழே உள்ள புதையலை எடுத்து விட்டால் பூக்கள் கருகாது".ஒரு சோம்பேறியைக் கடித்துத் தின்றால் ஓநாயின் வயிற்று வலி சரியாகிவிடும்" என்றார் அவர்.
          திரும்பி வந்த முல்லா, பலா மரத்திடம் புதையல் பற்றிக் கூறினார். பலாமரம், நீயே அந்தப் புதையலை எடுத்துக்கொள்" என்றது. அவன், "என்னை வேலை வாங்கப் பார்க்கிறாயா?" என்று திட்டிவிட்டுச் சென்றான்.

            ஓநாயிடம், "ஒரு சோம்பேறியைத் தின்றால் உன் வயிற்று வலிப் போய்விடும்" என்றான்.உடனே ஓநாய், "நீ சோம்பேறிதானே.....உன்னையே தின்றுவிடுகிறேன்" என்றது.

            " நான் சோம்பேறி இல்லை....." என்று அலறினான் முல்லா. "நான் நம்ப மாட்டேன்" என்றது ஓநாய்.
           முல்லா தான் சோம்பேறி இல்லை என்பதனை நம்ப வைப்பதற்கு, நூறு தென்னை மரங்களில் ஏறித் தேங்காய்களைப் பறித்துப் போட்டான்.சோம்பேறி இல்லை என்பதை நிரூபித்து தப்பித்து வீட்டிற்குச் சென்றான்.அதிலிருந்து தொடர்ந்து உழைத்து வந்தான்.அதைப் பார்த்து தந்தை மகிழ்ச்சிக் கொண்டார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...