பாலைவனம்-DESERT.
மிகக்குறைந்த மழைப்பொழிவைப் பெறும் இடங்களையே பாலைவனம் என்கிறோம். பொதுவாக ஆண்டுக்கு 250 மி. மீ. க்கும் குறைவாக மழைப்பொழிவைப் பெறும் பகுதிகள் பாலைவனங்கள் எனப்படுகின்றன.
புவியின் நிலப்பரப்பில் ஐந்தில் ஒரு பகுதி பாலைவனம் ஆகும். பாலைவனங்கள் வறண்ட நிலப்பகுதிகள் ஆகும். இங்கு பகலில் வெப்பம் மிகுந்தும் இரவில் குளிர் மிகுந்தும் இருக்கும். பாலைவனங்கள் மனிதவாழ்க்கைக்கு உகந்ததாக இருப்பதில்லை.
உலகில் வேறு வகையான பாலைவனங்களும் உள்ளன.
பாலைவன வகைகள் :
1.சூடான வறண்ட பாலைவனங்கள் :
சஹாரா பாலைவனம் .
* ஆப்பிரிக்காவின் வடக்கில் அமைந்துள்ள சஹாரா பாலைவனம் உலகின் பெரிய வெப்பமான பாலைவனங்களில் ஒன்று.
* நைல் என்னும் நதி இந்த பாலைவனத்திற்கு இடையில் ஓடுகிறது.
* ஆண்டு முழுவதும் வெப்பநிலை சூடாகவும் வறண்டதாகவும் இருக்கும்.
* ஒட்டகங்கள் இங்கு அதிக அளவில் காணப்படும்.
2. அரை வறண்ட பாலைவனங்கள் :
* கோபி பாலைவனம் இது வட சீனா மங்கோலியாவின் தெற்கு பகுதிகளை உள்ளடக்கியது.
* இங்கு மணலும் பாறைகளும் புல்வெளிகளும் குன்றுகளும் உள்ளன.
* இங்கு வெப்பநிலை சற்று குளிர்ச்சியாகவும் வறண்டதாகவும் காணப்படும்.
* பனிச்சிறுத்தை, கரும்புலி, காட்டுக் கழுதை போன்றவை இங்கே வாழ்கின்றன.
* அட்டகாமா பாலைவனம் தென் அமெரிக்காவில் சிலி- பெரு நாடுகளின் இடையில் உள்ளது.
* இங்கு எரிமலை குழம்புகளின் படிமங்களும், உப்பு படுகைகளும் அதிகம் காணப்படுகின்றன.
* இங்கே சில பகுதிகளில் சுமார் 400 ஆண்டுகளாக மழை பொழிவு ஏற்படாமல் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* இங்கு ஒட்டகம், எலிகள், சாம்பல்நரி, பெங்குயின் ஆகிய உயிரினங்கள் வாழ்கின்றன.
4.குளிர் பாலைவனங்கள் :
* அண்டார்டிகா உலகின் மிகப்பெரிய குளிர்பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது.
* இங்கு மிகக் குறைந்த வெப்பநிலையே நிலவும் மழை பொழிவும் மிக குறைந்த அளவே இருக்கும்.
* அதிக அளவு பனித்துகள்களும் பனிப்பாறைகளும் நிறைந்து காணப்படும்.
* பனிப்பகுதியில் வாழும் பெங்குயின், சீல், திமிங்கலம், கடற்பறவைகள் இங்கு காணப்படும் உயிரினங்கள் ஆகும்.
"This Content Sponsored by Genreviews.Online
Genreviews.online is One of the Review Portal Site
Website Link: https://genreviews.online/
Sponsor Content: #genreviews.online, #genreviews, #productreviews, #bestreviews, #reviewportal"
ليست هناك تعليقات:
إرسال تعليق