சுயபுத்தி வேண்டும்
ஓர் ஊரில் நெசவாளி ஒருவன் வாழ்ந்து வந்தான் . அவன் தறியில் துணி நெய்து விற்று, கிடைக்கும் ஓரளவு வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வந்தான்.
ஒரு நாள் தறியின் கழிகள் உடைந்து விடவே கட்டைகள் வெட்டி வர கோடாரியுடன் புறப்பட்டான்.கடற்கரையோரத்தில் இருந்த மரத்தை வெட்ட கோடாரியை உயர்த்தினான்.அப்போது ஒரு தேவதை, "நிறுத்து! இந்த மரத்தில் நான் குடியிருக்கிறேன்.வெட்டாதே!" என்று தடுத்தது.
நெசவாளி, "தறியின் கழிகள் உடைந்து விட்டன.துணி நெய்ய முடியவில்லை.என் குடும்பம் பசியால் துடிக்கிறது.வெட்டித்தான் ஆக வேண்டும்" என்றான். "மனிதனே! நீ இந்த மரத்தை வெட்டாமல் இருக்க என்ன வேண்டுமோ அதைக் கேள், தருகிறேன்!" என்று தேவதை கூறியது.
அவனுக்கு எதைக் கேட்பது என்று புரியவில்லை.அதனால் "மற்றவர்களிடம் யோசனைக் கேட்டு வருகிறேன்.அவகாசம் கொடு!" என்று கூறிவிட்டுப் புறப்பட்டான்.வழியில் நண்பன் ஒருவனைச் சந்தித்துக் கேட்டான்.அவன் முடி திருத்தும் தொழிலாளி.அவன்,"ஒரு பெரிய நாட்டைக் கேள்.நீ அரசனாகலாம்.நான் உனக்கு மந்திரியாகிறேன்.
இருவரும்சந்தோஷமாக வாழலாம்" என்றான்.
நெசவாளி அவன் கூறியதை ஏற்கவில்லை.நேரே தன் மனைவியிடம் சென்று கேட்டான்.அவளோ,"நண்பன் கூறியபடி நாட்டைக் கேட்காதே.அரசன் என்றால் பகைவர் இருப்பர்.எப்பொழுதும்று தொல்லைகள் கொடுப்பர்" என்றாள்.அதுவும் நியாயமாகத் தெரிந்தது.அடுத்து அவளே,"உனக்கு இப்போது இரண்டு கைகளும்ஒரு தலையும் மட்டுமே இருப்பதால் முன் பக்கமாக ஒரு துணியைநெய்கிறாய்.மேலும் இரண்டு கைகளும் ஒரு தலையும்,பின்புறமாக இருந்தால் இன்னொன்றையும் நெய்யலாம்.அதனால் வருமானம் இரட்டிப்பாகும்" என்று கூறினாள்.
நெசவாளியும் அவ்வாறே தேவதையிடம் சென்று கேட்டான்.அவளும் அளித்தாள்.அவன் இரண்டு தலை நான்கு கைகள் பெற்றவனாய் ஊருக்குள் நுழைந்ததும்,அவனை யாரும் மனிதனாக எண்ணவில்லை.அரக்கன் என்று நினைத்து அடித்து கொன்று விட்டனர்.
அதனால் யார் என்ன கூறினாலும் அப்படியே ஏற்றுக் கொள்ளாது , சுய புத்தியில் எது சரி? எது தவறு? என ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்.அதுவே நன்மை பயக்கும்.
@@@####@@@####@@@####@@@###@@@
EDUQUEST ONLINE COURSE :
Many online course available here!
Live class available and clear doubts on the spot!
Valuable and money worth!
Easy to join and learn easy!
Course offers! And more...
If you want to join eduquest course,
Use Eduquest course my refferal link :
https://eduquest.courses?wlr_ref=REF-SPX-RSU
ليست هناك تعليقات:
إرسال تعليق