الأحد، 4 مايو 2025

கருமை நிற கரைந்து உண்ணும் கருப்பு காகம்! நம் முன்னோர்களின் வடிவமாக கருதப்படும் காகம்! ! Dark colored Black crow !

 

               கருமை நிற காகம்!


     மனிதர்கள் வாழும் பகுதிகளில் அதிகம் வசிக்கக் கூடியவை காகங்கள். காகம் கரையும் (ஒலி) என்பார்கள்.காகங்கள் சைவ மற்றும் அசைவ உணவு வகை உயிரி.

           



உணவு :


      காக்கைகள் பொதுவாக அனைத்துண்ணிகள் ஆகும். தானியங்கள், புழுக்கள், விதைகள், கொட்டைகள், தவளை, நண்டு போன்றவற்றையும் உண்ணும். வயல்களில் உள்ள பூச்சிகளையும் உணவாகக் கொள்வதால் உழவர்களின் நண்பன் எனப்படுகிறது. இறந்த உடல்களையும் தின்னும்.


       மனிதர்களைப் போலவே காகங்களும் உண்பதற்கு கருவிகளை பயன்படுத்துகின்றன. மரக் குச்சியை கூர்மையாக்கி அதனை கொண்டு வர புகுந்துகளில் இருக்கும் புழுக்களை எடுத்து உண்கின்றன.


காகத்தின் கூடு :


        இவை கூடுகளைக் கட்ட மரக்குச்சிகள் சிறுசிறு இரும்பு கம்பிகளையும் பயன்படுத்துகின்றன. நம் நாட்டில் பல இடங்களில் வாழும் இந்த காகங்கள் இமயமலையில் சுமார் 2500 மீட்டர் இடங்களில் கூட வாழ்கின்றன. 

           காகங்கள் கார் வீடு என்னும் குடும்பத்தைச் சேர்ந்த பறவைகள் ஆகும். இவற்றில் சுமார் 40 வகைகள் உள்ளன. வெவ்வேறு பருவநிலை கொண்ட கண்டங்களிலும் இவை வாழக்கூடியவை .கதைகளில் கூறுவது போன்றே காகங்கள் புத்திசாலியான பறவை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றன.


ஒற்றுமை :


         ஒற்றுமையாக வாழும் பழக்கமுடைய காகங்கள் அதன் கூட்டத்தில் உள்ள ஒரு காகம் இறந்துவிட்டால் அந்த இடத்தில் உடனே நூற்றுக்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று கூடி தங்கள் இரங்கல் கூட்டம் நடத்தும்.

             



        மற்ற பறவைகளின் மூளையை காட்டிலும் காகங்களின் மூளை பெரியதாக உள்ளதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர் .

காகத்தின் சிறப்பு :


          மரங்களில் வாழும் காகங்கள் பொதுவாகக் 20 வருடங்கள் வரை உயிர்வாழக்கூடியவை. பெண் காகங்கள் மூன்று வருடங்களிலும் ஆண் காகங்கள் ஐந்து வயதில் பருவத்தை அடைந்து விடுகின்றன. கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொறிக்கும் இனத்தைச் சார்ந்தது. இதுவரை உலகில் அதிக வருடம் உயிர் வாழ்ந்த காகமாகக் கருதப்படுவது அமெரிக்காவின் காடுகளில் வாழ்ந்த காகம் ஆகும்.


நினைவுத்திறன் :


        30 ஆண்டுகள் காகங்கள் மனித முகங்களை நினைவில் வைத்திருக்கும்.


        ஹவாயென் காகம் மற்றும் மரியானா காகம் ஆகிய காக்கை இனங்கள் அழிந்து  விட்டன.


ஆன்மீகம் :


     ஆன்மீகத்தில் தங்களின் கர்மாவைக் கழிப்பதற்காக காகத்தை முன்னோர்களாகக் கருதுகிறார்கள்.


Sponsorship :


"This Content Sponsored by Buymote Shopping app

BuyMote E-Shopping Application is One of the Online Shopping App

Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)

Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8

Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping #buymoteapplication"


ليست هناك تعليقات:

إرسال تعليق

😋 சுவையான பீர்க்கங்காய் கூட்டு: எளிய முறையில் சமைக்கும் ரகசியம்! Yummy Birkankai Compound: The Secret to Easy Cooking!

                    😋பீர்க்கங்காய் கூட்டு 😋        சாதம், சப்பாத்தி, இட்லி, தோசை எனப் பலவற்றுடனும் அருமையாகச் சேரும் பீர்க்கங்காய் கூட்டு...