@ உறவுமுறை கடிதங்கள் @
உறவுமுறைக் கடிதங்கள் எழுதும் முறைகள் :
1 . உறவுமுறை கடிதங்கள் , குடும்ப உறுப்பினர்கள் , உறுப்பினர் அல்லாமல் உறவு முறைகளிலும் , நண்பர்களுக்கும் எழுதும் கடிதம் ஆகும்.
2 . கடிதத்தின் வலது பக்க ஓரத்தில் நீங்கள் எந்த இடத்தில் இருந்து எழுதுகிறீர்கள் அதாவது நீங்கள் இருக்கும் இடத்தின் பெயரை எழுத வேண்டும் காற்புள்ளி இடவேண்டும் (,).
எ.கா :
கும்பகோணம்.
3 . அதன் கீழ் கடிதம் எழுதும் நாள் இடம் பெற வேண்டும் . இறுதியில் நிறுத்துக்குறி இடவேண்டும் .
எ.கா :
கும்பகோணம்
4 . அதன் கீழ் இடது பக்க ஓரத்திலிருந்து கடிதத்தின்உறவு முறையை " அன்புள்ள அம்மா " "அன்பான தங்கை " என்று எழுத வேண்டும் .
எ.கா :
அன்புள்ள அம்மா,
5 . கடிதத்தில் கருவின் ஆரம்பத்தில் உடல் நலம் விசாரிக்கும் படியாக எழுத வேண்டும் . பின்பு நாம் எழுத இருக்கும் செய்தியை எளிதில் புரியும் படியாக எழுத வேண்டும். முன்பு கடிதம் எழுதியிருந்தால் அக்கடிதத்திற்கான பதிலினையும் விளக்கமாக எழுத வேண்டும் .
6. கடிதத்தின் இறுதியில் வலது பக்க ஓரத்தில் அன்புள்ள மாமா , அன்புள்ள தம்பி , அல்லது அன்பபுள்ள மகள் என உறவுமுறை குறிப்பிட்டு எழுதி அதன் கீழ் கையெழுத்திட வேண்டும்.
எ.கா :
அன்புள்ள மகள்
( கையொப்பம்)
7 . கடித உறைமேல் அனுப்ப வேண்டியவரின் முகவரி எழுதப்பட வேண்டும்.
எ.கா :
ச.சரண்யா ,
க/பெ ப.முத்துசாமி ,
கதவு எண் :16, செந்தில் நகர்,
திருவிடைமருதூர் தாலுக்கா ,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்-612602.)
மாதிரி கடிதம் 1 :
பள்ளி ஆண்டுவிழா பற்றி அம்மாவுக்கு
கடிதம் :
கும்பகோணம்.
07.04.2025.
அன்புள்ள அம்மா ,
நான் நலம் அதுபோல். அங்கு வீட்டில் அம்மா, அப்பா. தங்கை அனைவரும் நலமா ? தற்போது பள்ளி ஆண்டு இறுதி விழா நடைபெற உள்ளதால் எங்கள் பள்ளியில் 09.04.2025 அன்று பள்ளி ஆண்டு விழா நடைபெறுவதாக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. அதில் எனக்கு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவதற்கான பரிசுகளும் மற்றும் கவிதை ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும் .
மேலும் அன்று நடைபெற உள்ள கலை நிகழ்ச்சிகளில் நானும் பங்கேற்கிறேன். ஆதலால் நீங்கள் அப்பாவுடன் ஆண்டு விழாவிற்கு வந்து என்னுடைய திறமைகளை நேரில் கண்டு களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .
அன்புள்ள மகள்
க. அபிராமி.
உறைமேல் முகவரி :
ச.சரண்யா ,
க/பெ ப.முத்துசாமி ,
கதவு எண் :16, செந்தில் நகர்,
திருவிடைமருதூர் தாலுக்கா ,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்-612602.
மாதிரிக் கடிதம் : 2
Sponsorship :
"This Content Sponsored by Buymote Shopping app
BuyMote E-Shopping Application is One of the Online Shopping App
Now Available on Play Store & App Store (Buymote E-Shopping)
Click Below Link and Install Application: https://buymote.shop/links/0f5993744a9213079a6b53e8
Sponsor Content: #buymote #buymoteeshopping #buymoteonline #buymoteshopping
#buymoteeapplication"
ليست هناك تعليقات:
إرسال تعليق